சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோதியா? உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஹாஜா சரீஃப், மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். இதனை காரணமாக கூறி 5 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு சேர வேண்டிய பணப்பலன் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது போன்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. 

நாம் தற்போது 21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் அதிகாரிகளும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் தங்கள் மனநிலையையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என காட்டமான கருத்தை முன்வைத்த நீதிபதி பட்டு தேவானந்த் காவலருக்கு சேர வேண்டிய பண பலன்களை 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC Judge questions are minorities anti social


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->