“பார்க்கத் தானே போறீங்க, எங்க காளைகளோட ஆட்டத்தை…!”  போலீஸ் தேர்வினை மிஞ்சும், காளை வீரர்களின் தேர்வு…! களை கட்டும் மதுரை…! - Seithipunal
Seithipunal


 

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, நாளை முதல் மதுரையில் துவங்க உள்ளது.

நாளை மதுரை அவனியாபுரத்திலும், அதனைத் தொடர்ந்து, பாலமேடு, அலங்காநல்லுார் பகுதிகளிலும், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், கலந்து கொள்ளும் வீரர்களுக்கான, தேர்வும் வெகு சிரத்தையாக நடைபெற்றது. அவர்களது, உயரம், எடை மற்றும் அவர்களுக்கான சிறப்பு மருத்துவத் தேர்வும் நடைபெற்றது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுக்காக, ஆயிரக் கணக்கான காளை மாடுகள் பங்கேற்க உள்ளன. இதனை அடக்குவதற்கு, காளையர்களும், தயாராக உள்ளனர்.

சென்ற வருடத்தை விட, இந்த வருடம் இந்த ஜல்லிக்கட்டுக்கான, ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

அந்தக் காலத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திலேயே, பல காளையர்களை கன்னியர்கள் கண்டு, காதல் திருமணம் செய்து கொண்ட வரலாறெல்லாம் ரொம்ப சுவராசியமானது. பலர், அந்தக் காளைகளை,  பிள்ளைகளைப் போல வளர்த்து, ஸ்டுடியோவிற்குச் சென்று, அந்தக் காளைகளுடன் கருப்பு வெள்ளையில், தங்கள் குடும்பத்தினருடன் படம் எடுத்து வைத்து, அதை நினைவு கூர்கின்றனர்.

பல ஊர்களில் இருந்து, மதுரைக்கு காளைகள் வந்த வண்ணம் உள்ளன. எங்கு பார்த்தாலும், ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை அடக்கும் முறுக்கேறிய காளையர்களும், ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி வருகின்றனர்.

இதைக் காண, ஏராளமான வெளி நாட்டினர், மதுரைக்கு வருகை தந்துள்ளனர், என்பது குறிப்பிடத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai ready for jallikattu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->