மாவீரன் ''காடுவெட்டி ஜெ.குரு''வின் இறுதி பயணம்..!! - Seithipunal
Seithipunal


பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி ஜெ.குரு  நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இதையடுத்து காடுவெட்டி ஜெ.குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குருவின் உடலுக்கு வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காடுவெட்டிக்கு வந்து குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.பி. பொன்னுச்சாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க.வை சேர்ந்த அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராம ஜெயலிங்கம், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது, அவரின் இறுதி ஊர்வலம் சொந்தஊரில் நடைபெற்றுவருகிறது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்களின் கலந்து கொண்டுள்ளார். காடுவெட்டி ஜெ.குருவின்  தந்தை மற்றும் பாட்டனார் நினைவிடம் அருகேயே காடுவெட்டி ஜெ.குருவின் உடலும் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MAAVEERAN KADUVETTI J GURU LAST JOURNEY


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->