அகமதாபாத்தில் தமிழக மருத்துவ மாணவருக்கு நேர்ந்த கொடுமை..? விபரீதம் நடக்கும் முன் அரசு விழித்துக்கொள்ளுமா..? - Seithipunal
Seithipunal


மாரிராஜ், தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் இந்தியாவில் மிகப் பெரிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான அகமதாபாத்தில் உள்ள பி ஜெ மருத்துவகல்லுரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரியில் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளான மாரிராஜ் கடந்த ஜனவரி மாதம் தற்கொலைக்கு முயன்று சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார்.

இது தொடர்பாக பரத் தழல், பங்கஜ மோடி உள்ளிட்ட ஒன்பது மருத்துவர்கள் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு அகமதாபாத்தில் உள்ள சீபுக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஊடகங்களில் வெளி வந்து பெரும் விவாதத்தை உருவாக்கியது.

ஆனால் மருத்துவர் மாரிராஜ்க்கு நிகழ்ந்த ஒடுக்குமுறைகளும், புறக்கணிப்புகளும் தேசிய அளவில் கவனம் பெற்றும் கூட அவர் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. தற்கொலை முயற்சிக்கு முன் இருந்த அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது என்பது தான் வேதனை.

மேலும் அவர் பல்கலைக்கழக தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டில் பேரா.பரத் தழல் கையெழுத்துப் போடாததால் மாரிராஜ் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்களின் பெயர் பட்டியலில் மாரிராஜின் பெயர் விடுபட்டுள்ளது.

இது குறித்து நாம் அனைவரும் பேச வேண்டும். இதனை மீண்டும் விவாதபொருளாக்கி மாரிராஜ்க்கு நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

M Mariraj, who tried to commit suicide citing caste disrimination


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->