18 வயது ஆன அடுத்த நொடி.. காதலனை தஞ்சமடைந்த மாணவி.! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


18 வயது நிரம்பிய உடன் காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்த மாணவிக்கும், காதலனுக்கும் ‘கவுன்சிலிங்’ வழங்கி பின் இருவரின் விருப்படி செல்லலாம் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர கண்ணன். இவரின் மகள் தீபிகா இவருக்கு வயது 18. தீபிகா, கீழக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தீபிகாவும், பாம்பனில் வசித்து வரும் ராமன் என்பவரின் மகன் வெற்றிவேலும் [வயது 21] கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவி தீபிகாவிற்கு கடந்த மாதத்துடன் 18 வயது பூர்த்தியடைந்து உள்ளது. 

இதனையடுத்து, தீபிகா 18 வயது முடிந்த அடுத்த நொடியே [ஜூலை 1] தனது வீட்டிலிருந்து வெளியேறி, காதலன் வெற்றிவேல் வீட்டில் தஞ்சமடைந்தார். தீபிகாவின் தாய் அமுதா தன் மகளை காணவில்லை என முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர், தீபிகா -வெற்றிவேலை பிடித்து, முதுகுளத்தூர் நீதிமன்ற நீதிபதி கீதா முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கீதா, ''கல்லூரி மாணவி தீபிகாவிற்கு 18 வயது முடிந்து சில நாட்களே ஆன நிலையில், அவருக்கு ராமநாதபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் 'கவுன்சிலிங்' வழங்க வேண்டும்'' என  உத்தரவிட்டார்.

மேலும், தீபிகா -வெற்றிவேல் இருவரும் மேஜர் என்பதால், 'கவுன்சிலிங்' முடிந்த பின் இருவரின் விருப்பபடி செல்லலாம், எனவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love marriage court new judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->