ராமேஸ்வரத்தில் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள்.. புல்லட் குவியல்கள்..!! உண்மை வரலாறு வெளிவந்தது..!!! - Seithipunal
Seithipunal


இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில், அந்தோணியார்புரம் கடற்கறைப் பகுதியில் வசித்து வருபவர் எடிசன்.

இவர் தன் வீட்டுத் தோட்டத்தில், நேற்று செப்டிக் டேங்க் கட்டுவதற்காக, ஆட்களை வைத்து பூமியை தோண்டினார். 4 அடி ஆழத்தில், பார்த்த போது, அங்கு ஏராளமான வெடி குண்டுகளும், சர வரிசையாகத் தொங்கும் தோட்டாக்களும் தென்பட்டன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எடிசன், உடனே, போலீசுக்கு தகவல் தந்தார். ராமேஸ்வரம் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் ஒரு போலீஸ் படை, எடிசன் வீட்டிற்கு வந்து, ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது, அநதப் பள்ளத்தில் மேலும் தோண்டிப் பார்த்த போது, ஏ.கே. 47, எல்.எம்.ஜி. ரக துப்பாக்கிகள், அதற்குப் பயன் படுத்தும் தோட்டாக்கள், பாக்ஸ் வெடி குண்டுகள், என தோண்ட தோண்ட வெடி மருந்துப் பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

1983-ஆம் ஆண்டு, இலங்கையில் போராளி இயக்கங்களுக்கும், அந் நாட்டு ராணுவத்திற்கும் சண்டை நடைபெற்று வந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தலைமையிலான  மத்திய அரசின் ஆதரவில், ராமேஸ்வரத்தில், பல்வேறு விடுதலை அமைப்பினைச் சேர்ந்தவர்கள், விடுதலைப் புலிகள்,டெலோ, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் முகாம் அமைத்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் ஆதரவு தந்தார்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த வெடி குண்டுகள், கன்னிவெடி, துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்ற பொருட்களை பாதுகாப்பு கருதி புதைத்து வைத்திருந்தனர்.

பின்னர் தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, போராளிகள் அனைவரும் இலங்கைக்கு சென்று விட்டனர். அப்போது, அவர்கள் விட்டுச் சென்ற வெடி மருந்துப் பொருட்கள் தான், இப்போது பூமிக்கடியில் கிடைத்துள்ளது.

இன்று மதுரையில் இருந்து வெடி குண்டினை செயல் இழக்கச் செய்யும் குழுவினர், ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள், இந்த வெடி குண்டுகள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lot of bullets and bombs true find


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->