பிரம்மாண்ட சாமி சிலையைக் கொண்டு சென்ற வாகனத்தில், வெடித்துச் சிதறிய டயர்கள்…! அதிர்ச்சி அடைந்து ஓடிய மக்கள்…! தெய்வ குற்றம் காரணமா? - Seithipunal
Seithipunal


 

பெங்களுர் ஸ்ரீகோதண்ட ராமசாமி தேவஸ்தான கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான கோயிலில் வைப்பதற்காக, 64 அடி கொண்ட சிலையை உருவாக்க, நல்ல பாறையைத் தேடினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள கொரக்கோட்டை என்ற கிராமத்தில் அதற்கான பாறையைக் கண்டறிந்தனர். பின்பு, அந்தப் பாறையிலேயே, உருவம் செதுக்கப்பட்டது.

64 அடி நீளம், 24 அடி அகலம், 12 அடி உயரமுள்ள 230 டன் எடையுள்ள, பிரம்மாண்ட கோதண்ட ராமசாமியின் சிலை உருவாக்கப் பட்டது. இந்த சிலையை, 240 டயர்கள் கொண்ட பிரம்மாண்டமான கார்கோ லாரியில் ஏற்றிச் சென்றனர்.

ஆனால், வண்டி சென்ற சிறிது நேரத்தில், லாரியின் சக்கரங்கள் மண்ணிற்குள் புதைந்தன. பின், அந்த லாரியின் 6 டயர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.

இது தெய்வ குற்றம் என்று, அங்கிருந்தவர்கள் கூறத் துவங்கினர். பின், பெருமாளுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப் பட்டது.

இந்த சிலை, வந்தவாசியிலிருந்து பெங்களுர் செல்ல இரண்டு மாதங்கள் ஆகும், என்று கூறப்படுகிறது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorrey tyres were in burst with statue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->