செத்தும் வாழலாம்.! நிரூபித்துக்காட்டிய கண்டக்டர்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே காக்காச்சியேந்தலைச் சேர்ந்தவர் ராஜாங்கம், அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகப் பணி புரிந்து வருகிறார்.
    
இவரது மகன் பிரேம்குமார் (வயது 19), திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லுாரியில், பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
    
கடந்த, 5-ஆம் தேதி, தன்னுடன் படித்த நண்பருடன் வெளியே சென்று விட்டு,  திரும்ப விடுதிக்கு நடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக இவர் மீது ஆட்டோ மோதியது.
    
அதனால், பிரேம்குமார் பலத்த காயம் அடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம்குமார், மேல் சிகிச்சைக்காக, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
    
அங்கு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, கடந்த 8-ஆம் தேதி, மூளைச்சாவு ஏற்பட்டது. ஆனால், சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இருதயம், கண்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர் நிச்சயம் பிழைக்க வாய்ப்பில்லை, என்பதை உணர்ந்த டாக்டர்கள், இவரது உடல் உறுப்புகளைக் கொண்டு, 7 பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும் என்று பிரேம்குமாரின் தந்தையிடம் எடுத்துக் கூறினர்.
    
அதற்கு அவர், “என் மகன் இறந்த பின்னும், அவனது உறுப்புகளால், 7 பேர் உயிர் வாழ்வார்கள், என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது”, என்று பெருந்தன்மையாக சொல்லி சம்மதித்தார்.
    
இதன்படி, பிரேம்குமாரின் உடல் உறுப்புகளை நேற்று 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அந்த உறுப்புகளினால், தற்போது, 7 பேர் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.
    
இறப்பு என்பது, மனித வாழ்வில் நிச்சயமானது. ஆனால், அந்த இறப்பு கூட, நாலு பேருக்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான மனித வாழ்க்கை!
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

living dead proven conductor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->