பொங்கல் நேரத்தில் அதிர வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட பொதுமக்கள் - தமிழக அரசு எதிர்கொள்ளப்போகும் திடீர் சிக்கல் : அதிர்ச்சியில் ஆளும் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலால் படகுகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாட்டுப்படகு, பைபர் படகு மீனவர்கள் 55 நாட்களைக் கடந்த நிலையிலும் இதுவரை இழப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்காததால் வரும் தைப் பொங்கல் தினத்தை வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, கருப்பு பொங்கலாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி மற்றும் கழுமங்குடா ஆகிய மீனவர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் குடும் பங்கள் உள்ளன. கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலின் சீற்றத்தால் 16 படகுகள் பகுதியாகவும் 13 படகுகள் முழுமையாகவும் சேதமடைந்தன.

இதனால் மீனவர்கள் கடும்பாதிப்புக்கு ஆளாகினர். சேதம் அடைந்த படகுகளின் புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்டஆட்சியர், மீன்வளத்துறை உதவி இயக்குநர், மீன்வளத்துறை ஆய்வாளர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு முழு சேதமடைந்த பைபர் படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது. முழுமையாக சேதமடைந்த கழுமங்குடா பகுதியைச் சேர்ந்த 12 படகுகளுக்கும் மீனவர் காலனியைச் சேர்ந்த 1 படகிற்கும் இதே போல பகுதி சேதமடைந்த16 படகுகளுக்கும் இதுவரை நிவாரணம் வராததால், இதனை நம்பியிருந்த மீனவக் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘படகுகளை இழந்து 2 மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.

நிவாரணம் கேட்டு பலமுறை மனுக்கள்கொடுத்தும், போராட்டம் நடத்தியும், இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய நிவாரணப் பணம்மற்றும் நிவாரணப் பெட்டகம் ஏதும்சுனாமி வீடுகளில் வசிக்கும் மீனவர்களுக்கு மாடி வீடு எனக் கூறி வழங்கமறுக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு படகுகளை இழந்த மீனவர்களுக்கு, இழப்பீடும் புயல் பாதிப்பு நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும். இல்லையேல் வரும் பொங்கலன்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கருப்பு பொங்கலாக அனுசரிப்போம்’’ என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Letter to the cheif Minister, Edappadi Palinasamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->