தொடரும் இலங்கை கடற்படை அட்டுழியம்.! 3000 மீனவர்கள் கவலையுடன் கரைக்கு திரும்பியதால் ஏற்பட்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை சார்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்கள் மீது தாக்கத்தால் நடத்தியும்., மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும் அச்சுறுத்தி வருகிறது. 

இந்த அச்சுறுத்தலானது பல வருடங்களாக தொடர்ந்து வரும் நிலையில்., தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதும்., தாக்குதல் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளது. 

இந்நிலையில்., தமிழகத்தை சார்ந்த மீனவர்கள் 514 படகுகளில் சுமார் 3000 மீனவர்கள் கச்சத்தீவின் அருகே இருக்கும் இந்திய கடல் எல்லையில் இருந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். 

அந்த சமயத்தில் அங்கு வருகை தந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் சுமார் 15 கண்காணிப்பு படகுகளில் விரைந்து அங்கிருந்த மீனவர்களை விரட்டியடித்து அவர்களின் படகுகளை சேதப்படுத்தி., மீன் வலைகளையும் நாசப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். 

இந்த பிரச்சனை குறித்து இராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறையின் துணை இயக்குனரான காத்தவராயன் அவர்கள் நடைபெற்ற சம்பவம் குறித்து தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lankan army attack tamilnadu fisher mans


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->