அமைச்சரோட அண்ணன் எனக்கு அவ்வளோ குளோஸ் தெரியுமா..? கோவையில் 4 ஏக்கருக்கு உரிமையாளரான பாட்டியிடம் பகிரங்கமாக விடுக்கப்பட்ட சவால்.! - Seithipunal
Seithipunal


தங்களது நிலத்தை அமைச்சரின் அண்ணன்பெயரை பயன்படுத்தி அபகரிக்க செய்ய முயற்சிப்பதாகக் கூறி மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் தனது மகன் ரங்கசாமியுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அம் மனுவில், எனக்கும், என் மகனுக்கும் சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது.

அதனை, நாங்களே பராமரித்து வந்த நிலையில், தோட்ட வேலைக்கு உதவியாக சிவக்குமார் என்பவரை சிறிது காலத்திற்கு முன்பு அமர்த்தினோம்.

மேலும், அவர் தங்குவதற்கு தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்திருந்தோம்.இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் தனதுஉறவினர்களுடன் வந்து நிலத்தை உழ முயற்சித்தார்.

இதனை தட்டி கேட்ட என்னையும், எனது மகன் ரங்கசாமியையும் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து, நீங்கள் செய்வது சரிதானா என சிவக்குமாரிடம் கேட்டதற்கு, எங்களுக்கு அமைச்சர் வேலுமணி அண்ணனிடம் செல்வாக்கு உள்ளதாக கூறி மிரட்டினார்.

இதுகுறித்து குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், காவல்துறையினர் நீங்களே பேசி தீர்த்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எனது சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

land power taken by political person


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->