கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டின் மனைவி என்று சொல்லிக் கொண்டு, ஒரு பெண் ஜாமீன் மனு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2008-ஆம் ஆண்டு, கொடைக்கானல் பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி மேற் கொண்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, 2008-ஆம் ஆண்டு, கொடைக்கானல் மலைப் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஒரு இடத்தில், மறைந்திருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.

துப்பாக்கி சண்டையும் நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில், மாவோயிஸ்ட் நவீன் என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். பலர் தொடர்ந்து, கைது செய்யப் பட்டனர். அவர்கள் தனித் தனியாக வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பான விசாரணையில், மதுரையைச் சேர்ந்த நீலமேகம்,  கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப் பட்டார். இவர், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என்று கோரி ஐகோர்ட் கிளையில் மனுச் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. நீதிபதி, ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, கர்நாடக மாநிலம் முடகாரியைச் சேர்ந்த சென்னம்மா நீதிபதி முன் ஆஜர் ஆனார்.

அவர் நீதிபதியிடம், “நீலமேகம் தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல், 2015-ஆம் ஆண்டு வரை, தன்னுடன் வாழ்ந்ததாகவும், எந்த அமைப்புகளுடன் அவருக்குத் தொடர்பும் இல்லை, என்றும் கூறினார்.

மேலும், நீலமேகம் மீது பொய் வழக்கு போடப் பட்டுள்ளது. இந்தப் பொய் வழக்கில் போலீசார் என்னையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்” என்றார்.

இதனை அடுத்து, நீதிபதி, அந்தப் பெண்ணிடம், நீலமேகம் அவருடன் திருமணம் செய்து வாழ்ந்த்தை, அந்தப் பெண், எஸ்.பி. முன் ஆஜராகி விளக்க வேண்டும், என்றும், அது வரை, அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்யக் கூடாது, எனவும் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lady petition to police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->