மதம் மாறியது குறித்து டி.ராஜேந்திரன் முன்னிலையில் குறளரசனே விளக்கம்!! - Seithipunal
Seithipunal


நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன், தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்றவர். இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரது மூத்த மகன் நடிகர் சிம்பு இளம் வயதிலிருந்தே நடித்து வருகிறார். 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று சிறுவயதில் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இயற்பெயர் சிலம்பரசன் இவருக்கு குறளரசன் என்ற இளைய சகோதரர் ஒருவர் உள்ளார். இவர் பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசையமைத்தார்.

டி.ராஜேந்திரன் மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரின் முன்னிலையிலேயே அவரது இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என தகவல்கள் வெளியாகின. 

ஆனால், அவற்றில் உண்மை இல்லையென குறளரசன் விளக்கம் கொடுத்துள்ளார். இதுபற்றி, " நான் ஒரு பர்சனல் வேண்டுதலுக்காக அண்ணா சாலையில் அண்ணாசாலையில் உள்ள தர்காவுக்கு சென்றேன்.

என்னுடன் எனது அப்பாவும், அம்மாவும் கூட வந்தார்கள். அதைப்பார்த்து நான் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டதாக வதந்தியை பரப்பி விட்டார்கள்" என விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kuralarasan says about his conversion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->