போராட்டத்தில் கைதான ஆசிரியர்களுக்கு, அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த 22 ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டம், இன்று எட்டாவது நாளாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று சென்னையில் மட்டும் 2000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர், இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

இன்று காலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில் 95 சதவீத ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், தாங்கள் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவையில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அதில் 11 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து இருந்தனர். 

இதனையடுத்து இந்த 11 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் 11 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI COURT REJECT TEACHERS BAIL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->