நல்ல கேட்டுக்கங்க மக்களே! பயிற்சியாளர் மீது தப்பு இல்லயாம்! மாணவி மீதுதான் தப்பாம்.!! அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் தகவல்.!!! - Seithipunal
Seithipunal


நேற்று முன் தினம் கோவையில் என்எஸ்எஸ். (NSS) பயிற்சியின் போது மாணவி ஒருவர், 3-வது மாடியிலிருந்து, சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அந்த கல்லூரியின் முதல்வர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். லோகேஸ்வரி இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தயாராகும் முன்பே, பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவாக தள்ளிவிட்டார். ஆனால் குதிக்க தயாராகாத லோகேஸ்வரி, 3-ஆம் மாடியிலிருந்து 2-ஆம் மாடியின் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார்.

விழுந்த வேகத்தில் முகத்திலும் கழுத்தில் பலத்த காயமுற்ற லோகேஸ்வரி, முதலில் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தத்தவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, கூட்டத்தின் முடிவில், மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், முறையற்ற பயிற்சி வழங்கிய ஆறுமுகம் என்பவரை கைது செய்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

இதனையடுத்து, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு, போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை ஈரோடு தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த மனைவி பயின்ற கலைமகள் கல்லூரியின் முதல்வர் விஜயலட்சுமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திடுக்கிடும் பல தகவல்களை தெரிவித்துள்ளார், அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ''பயிற்சியாளர் மாணவியை பிடித்து தள்ளவில்லை, மாணவி எப்படி அமர்ந்து, குதிக்க வேண்டும் என கூறினார். அந்த மாணவி, அவர் சொல்வதை பின்பற்றி இருக்க வேண்டும், ஆனால் பயம் காரணமாக மாணவி லோகேஸ்வரி வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. அதனால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது''. என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ''தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பிரிவின் கடிதத்தில் ''ஆறுமுகம்'' அதிகாரப் பூர்வ பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் தான் அவர் சரியான நபர் என்று நினைத்தோம். தற்போது அவர் போலியானவர் என்று போலீசார் தெரிவித்துள்ளார்''. என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் மீது எந்த தவறும் இல்லை என்று கலைமகள் கல்லூரி முதல்வர் விஜயலட்சமி கூறியிருப்பது, மாணவியின் பெற்றோர்களையும், அந்த கல்லூரி மாணவ மாணவிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கலைமகள் கல்லூரியானது, அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமானது என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI COLLEGE GIRL ACCIDENT NEW INFORMATION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->