வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில்,ஆசிரியர் சொன்ன ஒத்த வார்த்தை.! உயிர் பிழைத்த மாணவன்.! - Seithipunal
Seithipunal


உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமாவிற்கு செல்லும் அளவிற்கு மோசமான நிலையில் இருந்த மாணவனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பேசியே பிழைக்க வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.

அவர் தனது நண்பர்களுடன் மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது சாப்பிடும் போதே அந்த மாணவன் மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.

doctor checking pulse க்கான பட முடிவு

இதையடுத்து சக மாணவர்கள் அருண்பாண்டியனை கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதால் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்னர் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு மாணவன் கொண்டு செல்லப்பட்டான்.ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை ,அழைத்து சென்று விடுங்கள் என கை விரித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற சோமசுந்தரம்,மணிகண்டன் என்ற இரு ஆசிரியர்கள் அந்த மாணவனின் காதருகே சென்று தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.

       

மேலும் உனக்கு ஒன்றும் இல்லை, நாங்கள் இருக்கின்றோம், நீ உடனே வகுப்பு வா, பாடம் நடத்த வேண்டும், படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மாறி மாறி பேசினர். இந்த பேச்சை கேட்டு முதலில் கண்களை உரூட்டிய அந்த மாணவர், பின்னர் கை, கால்களை லேசாக அசைத்தார்.

பின்னர்  சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க.. எங்களை தெரியுதா என்று ஆசிரியர்கள் கேட்க.. மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான்.

 தற்போது அந்த மாணவரின் உடல்நிலை மிக நன்றாக தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாத மாணவனை பேசியே பிழைக்க வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koma stage student recovery by teacher talk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->