கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை?! வெளியான புதிய தகவல்!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரங்கள் குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ  தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும், அவர் இது தொடர்பாக 5 நபர்களை கொலை செய்திருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்தன. மேலும், இதில் சம்மந்தப்பட்ட முதல்வர் பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என முக ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்லி சென்ற தமிழக காவல் படை, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை கைது செய்தது. ( இவர்களுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது) 

இதனிடையே, கோடநாடு வீடியோ விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி  மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரித்தால் முறையாக விசாரணை நடக்காது. எனவே சிபிஐ விசாரணை  வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு வருகிற ஜன.25ம் தேதி விசாரணைக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodanad Issue Supreme Court CBI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->