சற்றுமுன்: கீழடி அகழாய்வில் திடீர் திருப்பம்.! தங்க ஆபரணங்கள், உள்ளிட்ட 7000 பொருட்கள்.!! அதிகாரபூர்வ தகவல்.!! - Seithipunal
Seithipunal


மதுரையின் கிழக்குப் பகுதியில், தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், இது வரை நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் மேற் கொள்ளப் பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சங்க காலத்தில், நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்விடங்களில் கிடைத்த எச்சங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன.

முதல் கட்ட ஆய்வின் முடிவில், அங்கு அதிகாரியாக இருந்த அமர்நாத், கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களை எல்லாம், பொது மக்களின் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்தார். செய்தியாளர்களுக்கு எல்லாம் அதைப் பற்றிய விளக்கங்களையும் கொடுத்தார்.

தந்தத்தால் ஆன தாயக்கட்டை, எலும்பாலான எழுத்தாணி, அபூர்வமான கல் ஆபரணங்கள், சுடு மண் பொம்மைகள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மண் பானை ஓடுகள் போன்றவற்றை ஊடகங்கள் வாயிலாகவும் மக்கள் அறிந்து கொண்டார்கள்.
அதனை அடுத்து, மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. ஆனால், இதனைப் பொது மக்கள் பார்வையிட, தொல்லியல் துறையினர் அனுமதிக்கவில்லை.

தற்போது, நான்காவது கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று விட்டன. ஒப்பந்தப்படி, தோண்டிய குழிகளை எல்லாம் மூடப் போகிறார்கள். இந்த நான்காம் கட்ட அகழாய்வில், ஏராளமான பொன் ஆபரணங்கள், உள்ளிட்ட அபூர்வமான பொருட்கள் எல்லாம் ஆயிரக் கணக்கில் கிடைத்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், சற்றுமுன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழக அரசு வழக்கறிஞ்சர் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், ''3000 ஆண்டு பழமையான தங்க ஆபரணங்கள் உட்பட 7000 பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இதில் தங்க ஆபரணங்கள் ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பட்டுள்ளதாகவும்'' தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keezhadi report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->