வீடியோ வெளியானது... தமிழகத்தில் புதிய மாத்திரை மருந்துகளை நோயளிகளின் மீது பரிசோதனை செய்யும் மருத்துவர்..!! - Seithipunal
Seithipunal


காலில் ஏறப்பட்ட காயத்திற்காக சிகிச்சைக்கு சென்றவருக்கு ஏதேதோ மாத்திரைகளை கொடுத்ததால், உடல் நலம் குன்றி மரணடைந்த  சம்பவம் காரைகாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மாத்திரை மருந்துகளை நோயளிகளின் மீது செலுத்தி பரிசோதனை செய்வதாக  காரைக்கால் K.S மருத்துவமனை மீது அப்பகுதி மக்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

காரைக்கால் விழிதியூரை சேர்ந்த காந்தி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி காவேரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

காலில் மண்வெட்டி வெட்டியதற்காக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் அவருக்கு சிகிச்சை செய்த K.S மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரவணன் கொடுத்த மருந்துகளில் சில மருந்துகளை உட்கொண்ட போது உடலில் சில மாற்றங்கள் காணப்பட்டது.

அதுகுறித்து மருத்துவர்  சரவணனிடம் கேட்டதற்கு போக போக சரியாகி விடும் என்று கூறி உள்ளார்..

கடந்த வாரம் திடீரென கடுமையான வயிற்று வலியின் காரணமாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, பின்னர் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் கேட்டதற்கு காரைக்கால் K.S மருத்துவனையில் சரவணனால் கொடுக்கப்பட்ட மருந்துகள் அதிக பவர் உள்ள மருந்துகள் எனவும் அதனால் அனைத்து உள்  உறுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினர்.

இது தொடர்பாக் வெளியாகி இருக்கும் வீடியோ காட்சி:

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karaikal doctor tested tablets into patient


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->