தமிழகத்தை நோக்கி விரையும் மர்ம படகுகள் - என்ன நடக்கிறது தமிழக கடற்பரப்பில்..? முடுக்கி விடப்படும் பாதுகாப்பு நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம்அஞ்சுகிராமம் அருகில் அமைந்துள்ள வட்டக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கடற்படை தளமாகச் செயல்பட்டு வந்தது.

தற்போது இப்பகுதி சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்போது சுற்றுலாத்துறையின் கைகளில் இருந்தாலும் இப்பகுதி முன்னாள் கடற்படை தளமாக இருந்ததால் கடலோரக் காவல் படையினர் எப்போதும் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வட்டக்கோட்டையில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடல் பகுதியில் ஆறு விசைப்படகுகள் சுற்றிவந்தன.

பின்னர் அப்பகுதியில் ஆறு படகுகள் நங்கூரமிட்டு நின்றன. இதனைத் தொடர்ந்து அந்த விசைப் படகுகளில் இருந்து சிறுவள்ளங்கள் மூலம் சிலர் அருகில் இருக்கும் மீனவக்கிராமங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் அந்த ஆறு படகுகளில் பரிசோதனை செய்து படகில் வந்தவர்கள் யார்? அவர்கள் மீனவக் கிராமங்களுக்குச் சென்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடலோரக் காவல் படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஆறு விசைப்படகுகளும் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தது என்பதும் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்தும் படகுகள்என்பதும் தெரியவந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanyakumari-vattakoottai-fishermen-boat-issue


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->