ட்விட்டரில் மாறி மாறி கலாய்த்து கொள்ளும் எச்.ராஜா, மற்றும் கனிமொழி!! மீண்டும் பெரியார் சிலை பிரச்சனையா? - Seithipunal
Seithipunal


' படேல் சிலை உயிரற்ற சிலை, என்றால் தமிழகத்தில் உள்ள ஈ.வெ.ரா சிலைகள் மட்டும் உயிருள்ள சிலைகளா?' என திமுக எம்.பி கனிமொழிக்கு, பாஜக வை சேர்ந்த ஹெச்.ராஜா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளது, திமுகவினர் இடையே பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டேல் சிலை குறித்து, கனிமொழி மற்றும் எச்.ராஜா இருவருக்கும் இடையே டுவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. 

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்கவில்லை என  கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்தார். இதனை தொடர்ந்து அந்த டுவிட்டர் பதிவில், 'உயிரற்ற சிலைக்கு ரூ.3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு ரூ.350 கோடி' என பதிவிட்டிருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த ஹெச்.ராஜா அவர்கள், கனிமொழியின் விமர்சனதிற்கு சிலைகளுக்கு உயிர் உள்ளதா, இல்லையா? என்று குறிப்பிடும் பொருட்டு, 'படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக்கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா?' என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaniozhi vs h.raja on twitter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->