தமிழிசையா? கனிமொழியா.? என கேள்வி கேட்டதால், தப்பியோடிய காங்கிரஸ் தலைவர்!!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரு பெண் தலைவர்கள் எதிர், எதிராக மோதும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழக மக்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. காங்கிரஸின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான மருத்துவர். தமிழிசை சவுந்தரராஜனும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மகளும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி ஆகியோர் தூத்துக்குடியில் எதிர் எதிராக களம் இறங்குகின்றனர்.

தூத்துக்குடி மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மே 23ஆம் தேதி வெளியாகும். இந்நிலையில், இரு வேட்பளர்களும் அவரவர் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர். நேற்று மார்ச் 25 ல் தமிழிசை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் இடம் செய்தியாளர்கள், " நீங்கள் தூத்துக்குடி வேட்பாளர்களில் யாரை ஆதரித்து பிரசாரம் செய்வீர்கள்?

Image result for kumari anandhan seithipunal

உங்கள் கூட்டணி கட்சியான கனிமொழியை ஆதரித்தா? அல்லது உங்களது மகள் மருத்துவர் தமிழிசையை ஆதரித்தா? " என சிக்கலான கேள்விகளை எழுப்பினர். அதற்கு குமரிஅனந்தன், "40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் இருப்பினும். யார் யார் எந்த தொகுதியில் வெற்றி பெறுவார்கள் என்பதை அந்த தொகுதி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என கழுவிய மீனில் நழுவிய மீனாக பதிலளித்து சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi and thamilisai who will win thuthukudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->