கனிமொழியை போட்டு தாக்க களத்தில் இறங்கும் தமிழிசை!! இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இது தான்!!  - Seithipunal
Seithipunal


2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணிகள் அறிவிப்பானது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் இவ்வேளையில் தேமுதிக மட்டும் இன்னும் இழுபறியில் உள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போன்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என ஓரளவு தெரிந்துவிட்ட நிலையில், பாஜக எந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம் என ஆலோசனை நடத்தி வருகிரது. 

இதுகுறித்து நேற்று மதுரையில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியல் அளிக்கப்பட்டது. பாஜகவிற்கு, உத்தேச பட்டியலின் அடிப்படையில் வடசென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன் மற்றும் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

திமுக சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி நிற்பது உறுதியாகிய நிலையில், அங்கு கனிமொழிக்கு எதிராக தமிழிசை அவர்களை நிற்க வைக்க 
அதிமுக முடிவு செய்திருப்பது, அவர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்க படுகிறது. 

கனிமொழிக்கும், தமிழிசைக்கும் இடையில் ஒரு ஒற்றுமை என்றால்,இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவது தான் என்று இணையதளவாசிகள் பலர் விமர்சித்து வருகின்றனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த தொகுதி MLA வான கீதா ஜீவன் (திமுக) அம்மக்களுக்கு உதவவில்லை என ஆத்திரத்தில் இருப்பதால், இம்முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும் என மக்களால் மிகுவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi and tamilisai will compete in thuthukudi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->