இப்படியொரு வேலை பார்க்கலாமா திமுக..? வெளியான புகைப்படம் - வைரலாகி வரும் காட்சி..! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது.

ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 25பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. தவிர வேறு யாரும் விருப்ப மனுதாக்கல் செய்யவில்லை.

தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி பெயரில் 33 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

அப்போது, தூத்துக்குடி தொகுதிக்கு விருப்பமனு கொடுத்திருந்த கனிமொழியும் இந்த நேர்காணலில் பங்கேற்றார். அப்போது, கனிமொழியிடம் தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இந்த நேர்காணலின்போது பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மாவட்டச் செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உடனிருந்தனர்.

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிபட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திகுளம், ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடந்தது.

ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கருத்துக்கள் கேட்டார்.

இந்த நிலையில் கனிமொழியிடம் நேர்காணல் நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

கனிமொழியை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையை உருவாக்கியதும் திமுக தான், தனது குடும்பத்தில் ஒருவர் என்று தெரிந்தும் சாங்கியத்திற்கு நேர்காணல் நடத்தி விடுவோம் என்று நினைக்கும் திமுகவின் மனநிலையை பாருங்கள், இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள் என்ற வாசகங்களுடன் அந்த புகைப்படத்தை வைத்து பாதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimoli mp interview


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->