கமல் போட்டியிடும் தொகுதி?! வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வெளியான அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் சென்னையில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் மற்றும் அவருடைய கல்வி தகுதி ஆகியவற்றை சோதித்து முடிவு செய்தனர்.

முன்னதாக 20 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இன்று,கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். 

பின்னர், பேசிய கமல்,"மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மீது பின்னால் குற்றச்சாட்டு வந்தால், விசாரணை நடத்தப்பட்டு ராஜினாமா செய்யப்படுவார்கள்." என அவர் கூறினார்.

கமல் வெளியிட்ட பட்டியலின்படி,

எந்தெந்த தொகுதிகளுக்கு எந்தெந்த வேட்பாளர்கள் பார்க்கலாம்.

திருவண்ணாமலை -அருண்  
ஆரணி -ஷாஜி  
நாமக்கல் -தங்கவேலு  
ராமநாதபுரம் -விஜயபாஸ்கர்  
கரூர் -டாக்டர் அருள்  
மதுரை -எம்.அழகர்  
தென்சென்னை -ரங்கராஜன்  
கடலூர் -அண்ணாமலை  
விருதுநகர் -முனியசாமி  
திருப்பூர் -வி.எஸ். சந்திரகுமார்  
பொள்ளாச்சி -ஆர். மூகாம்பிகை  
கோவை -ஆர். மகேந்திரன்.

இடைத்தேர்தல் பட்டியல்கள்:

பெரம்பூர் -வி.பிரியதர்ஷினி  
திருப்போரூர் -கே.யு.கருணாகரன்  
சோளிங்கர் -கே.எஸ். மலைராஜன்  
குடியாத்தம் -டி.வெங்கடேசன்  
ஆம்பூர் -நந்தகோபால்  
ஓசூர் -ஜெயபால்  
நிலக்கோட்டை -ஆர்.சின்னதுரை  
திருவாரூர் -கே. அருண் சிதம்பரம்  
தஞ்சாவூர் -துரையரசன்  
ஆண்டிப்பட்டி -தங்கவேல்  
பெரியகுளம் -கே.பிரபு  
சாத்தூர் -என். சுந்தர்ராஜ்  
பரமக்குடி -உக்கிரபாண்டியன்  
விளாத்திகுளம் -டி.நடராஜன்  
திருபெரும்புதூர் -ஸ்ரீதர். 

மேலும், கமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவித்த நிலையில், கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal introduced candidate in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->