கமலஹாசனின் அதிரடி திட்டம்! 12000 கிராமங்கள்! மக்கள் ஆதரவு தந்தாள் நிறைவேற்றுவேன்! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அதிகத்தூா் என்ற கிராமம் தத்தெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை அந்த கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டாா். கூட்டத்தில் கிராமத்தின் வளா்ச்சிக்கு தேவையானவை குறித்து ஆலோசனை செய்யபட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் பேசுகையில், தற்போது 8 கிராமங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கிராமங்கள் உள்ளன. எங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தால் அனைத்து கிராமங்களையும் தத்தெடுக்க எங்களால் முடியும். 

தற்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீா்மானங்களில், 50க்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்ட பணிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக, பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தரப்படும். கல்விக்கு நிகராக சுகாதாரம் கருதப்படுகிறது.

எனவே கிராமத்திற்கு 100 கழிவறைகள் கட்டித் தரப்படும். கிராமத்தில் நீர் சேகாிக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். மக்கள் தங்களது தனித்திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பயிற்சி பட்டறைகள் அமைத்து தரப்படும் உள்ளிட்ட உறுதி மொழிகளை அளித்துள்ளாா். மக்கள் ஓட்டுப் போடவேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களை தத்தெடுக்கவில்லை எனவும் கமலஹாசன் தொிவித்துள்ளாா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan Action Plan 12000 villages People will give support to me


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->