கேரளாவைப் போல் ஏன் உங்களால் செய்ய முடியலை…? - Seithipunal
Seithipunal


 

கஜா புயலின் ஏற்பட்ட பாதிப்பிற்கு, ஏற்ப நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை, என்பதைச் சுட்டிக் காட்டி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆதி கேசவலு ஆகியோர் முன்னிலையில், இதற்கான விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில், நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து, மத்திய அரசு வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையே நீதிபதிகள் குறுக்கிட்டு, “கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, அதன் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும், இந்த நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெறாமல் உள்ளதே, ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு வக்கீல், இடையே விடுமுறை இருந்ததால், அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள இயலவில்லை, என்றார்.

அதற்கு நீதிபதிகள், இந்த மாதிரியான பேரிடர் கால நிலையில், அரசுகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும், என்று வலியுறுத்தினர்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judges questioned the Central Government


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->