காட்டுமன்னார்கோயிலில் திருட்டு.! அப்பாவி கூலித்தொழிலாளி வீட்டில் கைவரிசையை காட்டிய படுபாவி கொள்ளையர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு எந்த ஒரு முயற்சியையும் செய்யாத நிலையில், இந்த திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்டம் கட்டுமன்னார்குடி அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள வீரநத்தம் சின்னதெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ரவிச்சந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொது, நள்ளிரவில் மர்மநபர்கள் மாடிப்பகுதி வழியாக வீட்டுக்குள் புகுந்து, அவர்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.8 ஆயிரம், மற்றும் வீட்டு பத்திரங்களை திருடிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் நகை-பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன், குமராட்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jewels and money robbery in kattumannarkoil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->