ஜெயலலிதாவையே அசிங்கப்படுத்திய அமமுகவினர்!! கும்பகோணம் அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் நள்ளிரவில் கும்பகோணத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையின் அருகே ஜெயலலிதாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு- கிழக்கு தெரு சந்திப்பில், உள்ள ஆச்சி விநாயகர் கோயில் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த சிலைக்கு அருகிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மார்பளவு சிமென்ட்டால் செய்யப்பட்ட சிலையை நள்ளிரவில் அமமுகவினர் அமைத்துள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு பொது இடங்களில் சிலை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திடீரென யாரும் எதிர்பாராத வேலையில் ஜெயலலிதாவுக்கு நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல் துறையினர் இதுகுறித்து தகவலறிந்து நேற்று காலை அங்கு சென்று, சிலையை வைத்தது யார் என விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், அமமுக நகரச் செயலாளர் குருமூர்த்தி என்பவர், "ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். 

மேலும், உடனடியாக சிலையை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், தமிழகம் முழுவதும் இதுபோல ஜெயலலிதாவின் சிலைகள் அனுமதி பெறாமல்தான் வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளை முதலில் அகற்றுங்கள், நாங்களும் அகற்றிவிடுகிறோம் என கூறிவிட்டோம்” என தெரிவித்துள்ளார். 

ஆனால், அப்பகுதியினர் பலர் இது "ஜெயலலிதா சிலை போல இல்ல. அவங்கள அசிங்க படுத்துவது போல் இருக்கு" என கூறி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalalitha statue in kumbakonam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->