நடு சாமத்தில் சொல்லி நடக்கவிருந்த மிகப்பெரிய நாசகரம் மூடி மறைப்பு.. ஜெயலலிதா எப்போது இறந்தார் தெரியுமா..? தமிழக அரசியலை உலுக்கும் தகவல்..!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகியது.

டிசம்பர்  5, 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆளுனரின் மரியாதைக்குப் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தனர்.

தற்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு.

இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் திடீரென, அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியைத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அவர் பேசும்போது, ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார்.

அப்போலோ மருத்துவமனை பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது.

உடனடியாக ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, எங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் எனக் கூறினார்கள்" என்று தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalalitha dead date secret infront of media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->