ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்ட போட்டிகளுக்கு திடீர் தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.

காளைகளுக்கு, மண் குவியலில் குத்துதல், ஓட்டம், நீச்சல் பயிற்சி, மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்து விடுதல் போன்ற பயிற்சிகளையும் உரிமையாளர்கள் கொடுத்து வருகின்றனர். மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது  

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்ட போட்டிகளை நடத்த  மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். அதாவது, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் உள்ள அனுமதிக்கப்பட்ட இடங்களில் தர்மபுரி மாவட்டம் இடம்பெறவில்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu Sports Ban Dharumapuri District


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->