ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கு 2 இலட்சம்! மத்திய அரசின் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதனிடையே, மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது  

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. கடந்த முறை விட இந்த முறை அதிகப்படியாக காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. 

இந்நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ. 12 பிரீமியத்தில் இரண்டு லட்சத்துக்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா  திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கான ஒரு வருட காப்பீடு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu Insurance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->