ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு!  - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.   தமிழகத்தில் மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன் படி மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம் , 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 
 
அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில்,  தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதற்கான அரசாணைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த மலையாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது, 2019 ஜனவரி 7-ல் அரசு செயலர் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, 2009 அரசாணை படி ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கில் வருகிற ஜனவரி 21-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu Game Go ban Case Filed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->