இன்னும் சற்று நேரத்தில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் வரலாற்று நிகழ்வு - மளமளவென குவியும் மக்கள் கூட்டம் : மூச்சு திணறும் காவல்துறை.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஈரோடு அடுத்துள்ள பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏஈடி பள்ளி மைதானத்தில் இன்று (ஜனவரி  19) நடைபெற உள்ளது.

தென்மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு  மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பையும் பெற்றுள்ளது. 

போட்டிகளை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

100 ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதே போல 200 முதல் 230 மாடுபிடி வீரர்கள் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் சுற்றில் 100 மாடுபிடி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அடுத்த சுற்றில் மீதமுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

முதன்முறையாக நடப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 16 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu first time in erode


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->