வேலூர் மதுக்கடையில் இளைஞர் படுகொலை.! நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க சென்றதால் நடந்த விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழிக்கேற்ப, இந்த குடி ஒரு இளைஞரின் குடியை கெடுத்துள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்தவர் குமார், இவருடைய மகன் சக்திவேல் வயது 22,  இவர் பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், இந்த ஆண்டு ஐ.டி.ஐ.யில் சேர்ந்துள்ளார். ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்காக தனது நண்பர்களுக்கு மது விருந்து கொடுக்க முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 7 மணியளவில் இவருடைய நண்பர்களான, ஜீவாநகரை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் கே.கே.நகரை சேர்ந்த நவீன்குமார் உட்பட ஆறு பேரும், வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று அங்குள்ள அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான பாரில் அவர்கள் மது அருந்தினர். அந்த பாரில் வசந்தபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சிக்கன், முட்டை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது நண்பர் சதுப்பேரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் வந்து மது அருந்தினார்.

அப்போது மதுபோதை அதிகமானதால், சக்திவேலின் நண்பர்களுக்கும் சதீஷ் குமாருக்கும் தகராறு ஏற்பட்டது, அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்பு சக்திவேலும் அவரது நண்பர்களும், அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். முதலில் 3 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில்  சென்றுவிட்டனர். பின்பு சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது மீண்டும் சதீஷ்குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் ஆறுமுகம் அந்த மூவரையும் மதுபாட்டில் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக குத்தினர்.

அப்போது, வயிற்றில் குத்து விழுந்து சக்திவேலுக்கு குடல் வெளியே வந்துவிட்டது. உடனே அங்கு இருந்தவர்கள், அவர்களை ஆம்புலன்ஸில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.மற்ற 2 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார் தொழிலாளி ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை செய்தனர், சதிஷ்குமாரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITI student murder in tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->