கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ஆபத்து..? சமூக ஆர்வலர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றுஅரசிடம் உரிய விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணியை விரைவுபடுத்தி, படகுபோக்குவரத்து ஏற்படுத்த வேண்டுமென இராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார்,

அதில் “கன்னியாகுமரி மாவட்டத் தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை சிறப்புமிக்கது,133 அடி உயரத்துடன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. திருவள்ளுவர் சிலைமற்றும் சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் சுற்றுலா துறை மூலமாக படகு போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது.

கடலின் உப்பு காற்று சிலையின் மீது வீசுவதால் சிலையை பாதுகாக்க நான்கு வருடத்திற்கு ஒருமுறை வேதியியல் பொருட்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்துசிலையின் மீது உள்ள உப்புகள் அகற்றப்பட்டு, சிலை பாதுகாக்கப்படும்.ஆனால் கடந்த ஐந்து வருடமாகதிருவள்ளுவர் சிலை பராமரிக்கவில்லை.

அவ்வப்போது திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்க்கப்படுவதில்லை.திருவள்ளுவர் சிலை பராமறிப்பிற்காக தமிழக அரசு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, இதுவரை எவ்வித பராமரிப்பு பணிகளும் தொடங்கவில்லை. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர்மண்டபதிற்கும் சேர்த்து படகுப் போக்குவரத்திற்கு ரூ.35 வசூலிக்கப்படுகிறது.

தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டும் தான் படகு போக்குவரத்து உள்ளது. ஆனால் அதே தொகை தான் வசூலிக்கப்படுகிறது. திருவள்ளுவர் சிலையின் பராமரிப்புப் பணிகள் தொடர்பாகவும், படகுப்போக்குவரத்து ஏற்படுத்தவும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் கட்டவும் அல்லது காந்தி மண்டபத்தில் இருந்துதிருவள்ளுவர் சிலைக்கு பாலம் கட்டவும் கோரிக்கை வைக்கப்பட்டு, கடந்த 2018 அக்டோபர் மாதம் சுற்றுலாத் துறைமுதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதனால் பொதுமக்களுக்கு திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து ஏற்படுத்தவும் மற்றும்விவேகானந்தர் மண்டபத்தில் இருந்துதிருவள்ளுவர் சிலைக்கு பாலம் கட்டவும் அல்லது காந்தி மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் கட்டவும்,திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணியை தொடரவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,அப்போது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும் பராமரிப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து அரசிடம் உரிய விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டுவாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is necessary to maintain the Thiruvalluvar statue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->