#BREAKING இணையதளசேவை சேவை முடக்கம்..! தமிழக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள்  மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 75 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும், இதனால் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள்,திரைபிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.

முன்னதாக, கலவரத்தை தவிர்க்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாி மாவட்டங்களில் 5 நாள்களுக்கு இணைதள சேவை முடக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சமூக ஆர்வலர்கள் 10 பேர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் சுரேஷ் குமார், தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்டது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கலவரம் நடந்த மாவட்டங்கள் தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்பியதாக தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், இயல்பு நிலைக்கு திரும்பிய பின் இனியும் ஏன் இணையதள சேவையை முடக்கி வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரிவிக்காத அரசு தரப்பு வழக்கறிஞர் மௌனமாக இருந்தார், இதனையடுத்து, நெல்லை, கன்னியாகுமரியில் தேவையில்லாமல் இணைய தள சேவையை துண்டித்தது ஏன்? என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இன்று மாலை 3 மணிக்குள் பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும்,  தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்? அவர்களின் சிகிச்சை குறித்து அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INTERNET CONNECTION BAN HIGH COURT NEW ORDER


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->