இப்படியும் காவல்துறையில் நடக்குமா?! பெண் காவலர்களை குறி வைக்கும் அதிகாரி! - Seithipunal
Seithipunal


கொங்கு தமிழ் பேசும், கோயம்புத்துார் மாநகர காவல் துறை ஆயுதப்படை பிரிவில் “சந்திர” இன்ஸ்பெக்டர் தான், ஆயுதப்படை பிரிவில் எல்லாமாக இருக்கிறார். இந்த ஆயுதப்படைப் பிரிவில், இவரை விட உயர் அதிகாரியான, துணை கமிசனர், இருக்கிறார். ஆனால், அவர் பெயருக்குத் தான், உயர் அதிகாரியே ஒழிய, அவரையும் டம்மியாக்கி விட்டாராம், இந்த இன்ஸ்பெக்டர்.

அதனால், உயர் அதிகாரிகள், தங்களது ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம், மேலிடத்தின் செல்வாக்கோடு, இவரே செய்து வருகிறார். காவல் துறை வாகனங்களுக்கு டீசல் போடுவது, ஆண், பெண் போலீசாருக்கு ஏரியா வாரியாக பணியைப் பிரித்து வழங்குவது எல்லாம் இவர் தான்.

அப்படி வாகனங்களுக்கு டீசல் போடுவதிலும், லட்சக் கணக்கில், பணத்தைச் சுருட்டுகிறார், என்று சக காவல் துறையினரே, முனகிக் கொண்டிருக்கின்றனர். பணி மாறுதலிலும் இவர் கையே ஓங்கி இருக்கிறதாம். யாராவது, டிரான்ஸ்பர் கேட்டால், தனக்கு வேண்டியவர்களாக இருந்தாலோ, தனது பேச்சைக் கேட்டபவர்களாக இருந்தால் தான், இட மாறுதலுக்கான, அடுத்த கட்ட நடவடிக்கையே எடுக்கிறாராம். சீனியாரிட்டி, மற்றும் அவசரத் தேவைகளுக்கான மாறுதல்களை எல்லாம் கண்டு கொள்ள மாட்டாராம்.

முக்கியமாக, இவரது விருப்பதிற்கு ஏற்ப வளைந்து கொடுத்தால் தான், பெண் போலீசாரின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாராம். இப்படி, பணம், பெண் ஆசை என்று அலையும், இந்த ஆய்வாளரைப் பற்றிப் பல புகார்கள் வந்தும், இது வரை, உயர் அதிகாரிகள் யாரும் இவர் மீது  ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்று சக போலீசாரரே, ஆச்சர்யத்துடன் கேட்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

inspector mis use the lady police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->