விழுப்புரம் அருகே பரபரப்பு.! பள்ளி வளாகத்தில் மாணவியை சீரழித்த ஊழியன்.!! விசாரணையின் முழு விபரம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலூர் சேலாம் பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பில் மாணவி ஒருவர் பயின்று வருகிறார். அவர் அதே பள்ளியில் இருக்கும் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். 

சம்பவத்தன்று மாணவி பள்ளி நேரம் முடிந்து இரவு 9 மணியாகியும் மாணவி விடுதிக்கு வராததால்., சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் மனைவியை பள்ளி வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர். அந்த சமயத்தில் சுமார் 10.30 மணியளவில் மாணவியின் ஆடைகள் அனைத்தும் களையப்பட நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகே கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியருக்கு தகவல் வழங்கினர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவக்குழுவினருக்கு தகவல் கொடுத்து மாணவிக்கு முதலுதவிகள் வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து அவர்களே விசாரணையும் மேற்கொண்டனர்.

அந்த விசாரணைக்கு பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த 15 ம் தேதியன்று பள்ளி ஊழியரான ஆல்பர்ட் சவுந்தராஜன் என்பவரின் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் திருக்கோவிலூர் மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசிய காவல் கண்காணிப்பாளர் மாணவியின் மனநலம் குறித்தும்., அவருக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

உடனடியாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ஆல்பர்ட் சவுந்தராஜனை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும்., பாதிக்கப்பட்ட மாணவியை விழுப்புரம் முண்டியபக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து., அவருக்கு தீவிர சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த சம்பவம் குறித்து எதற்காக காவல் துறையினரிடம் உடனடி தகவல் வழங்கவில்லை? என்றும் இதற்கு பின்னணி ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும்., கடந்த 17 ம் தேதியன்று செய்தித்தாள்களில் வெளியான செய்திகளை கண்ட பின்னர்தான் கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டது தெரியவந்தது. இதற்கு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்ற தொடர் விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தலைமையாசிரியரிடம் விசாரணை மேற்கொண்ட போது., பள்ளியின் ஊழியர்கள் சம்பவம் குறித்து தெரிவித்த தகவலை கேட்டு இரவு 12 மணியளவில் பள்ளிக்கு வந்தடைந்த நான்., உடனடியாக சம்பவம் குறித்து மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மேலும்., காவல் நிலையத்தில் புகார் வழங்குவதற்கு முன்னதாக மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்., மேலும் இந்த விசயம் குறித்து கல்வி துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்காதது தவறுதான் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN VILUPURAM SCHOOL GIRL STUDENT RAPPED IN SCHOOL CAMPUS


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->