குடும்பத்துடன் தற்கொலை., எனது ஆட்டோவை விற்பனை செய்து கடனை கொடுத்துவிடுங்கள்.! கடிதத்தில் இருந்த சோக கண்ணீர் விஷயங்கள்.!!   - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புரத்தில் இருக்கும் பாரி தெரு பகுதியை சார்ந்தவர் பால சகாயராஜ் (43). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் யுவராணி (வயது 40). இவர்கள் இருவருக்கும் முத்துலட்சுமி என்கிற 25 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் நர்சிங் துறையில் பயின்று வருகிறார். இவர்கள் வசித்த இல்லம் கடந்த இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. 

இந்த மாத வாடகையை தற்போது வரை வீட்டின் உரிமையாளருக்கு தரவில்லை என்பதால்., வீட்டின் உரிமையாளரான விஜயலட்சுமி தொடர்ந்து சகாயராஜின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரது அலைபேசியானது அனைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர்., நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இல்லத்திற்கு வந்து பார்த்த சமயத்தில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் எடுத்துளளது. 

இதனையடுத்து சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி சந்தேகமடைந்து., வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது சகாயராஜ் தனி சேலையில்., முத்துலட்சுமி மற்றும் யுவராணி தனி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்தார். இந்த விசயத்தை உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். 

சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்ததும்., வீட்டின் கதவை உடைத்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்.,. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் சகாயராஜின் 17 வயதுடைய மகனான நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அவரின் மறைவிற்கு பின்னர் அந்த சோகத்தில் இருந்து விடுபடுவதற்காக அங்கிருந்து வீட்டை மாற்றி பாரி தெருவிற்கு குடிவந்துள்ள நிலையில்., வீடு மாறியும் தனது மகனின் எண்ணம் அவர்களிடம் சூழ்ந்தே கணபட்டகள் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில்., அவர்களின் இல்லத்தில் இருந்த கடிதமானது காவல் துறையினருக்கு கிடைத்தது.  

அந்த கடிதத்தில் " எங்களின் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை., நாங்கள் ஒன்று சேர்ந்தே இந்த முடிவை எடுத்தோம். எனது மனைவியான யுவராணியின் அக்கா சுசீலாவிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்ற நிலையில்., அந்த கடன் தொகையை எனது ஆட்டோவை விற்பனை செய்து தனது விடுங்கள் என்று உருக்கமான சோக முடிவில் எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy a family members attempt suicide Debt troublesome


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->