திருத்தணி மாற்றுத்திறனாளி பெண் மற்றும் மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! சிக்கிய குற்றவாளி., வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியை சார்ந்தவர் வனப்பெருமாள் (வயது 50). இவர் அங்குள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் வீரலட்சுமி (வயது 45). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர்கள் இருவருக்கும் பவித்ரா என்ற 25 வயதுடைய மகளும்., போதிராஜா என்ற 10 வயதுடைய மகனும் உள்ளனர். 

பவித்ராவுக்கு திருமணம் முடிந்த நிலையில்., அவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களின் மகனான போதிராஜா 5 ம் வகுப்பு பயின்று வருகிறார். வனப்பெருமாள் கடந்த 9 ம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்., இல்லத்தில் வரலட்சுமி மற்றும் போதிராஜா ஆகியோர் இருந்துள்ளனர். மீண்டும் காலையில் தனது பணியை முடித்துவிட்டு இல்லத்திற்கு வனப்பெருமாள் திரும்பியுள்ளார். 

அந்த சமயத்தில் வீட்டிற்கு உள்ளே வந்து பார்த்த போது வரலட்சுமி இரத்த வெள்ளத்தில் இறந்தும்., மகன் போதிராஜா இறந்தும் கிடந்துள்ளார். இதனை கண்டு கதறியழுத வனப்பெருமாளின் கதறலை கேட்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்தனர். இல்லத்தில் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்த தகவலை காவல் துறையினருக்கு தெரியப்படுத்தினர். 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம கும்பலை தடுக்க முயன்ற வீரலட்சுமியை அரிவாளால் வெட்டியும்., தாயாரின் அலறலை கேட்டு வந்த சிறுவனை அயன் செய்யும் இயந்திரத்தின் வயர் மூலமாக கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. 

இவர்களை கொலை செய்த கும்பல்., பின்னர் பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலையை செய்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில்., கொலை செய்யப்பட்ட விஜியின் நகத்தில் இரத்த துளிகள் இருந்துள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் செய்த சோதனையில் கொலையானவர்களின் இரத்தத்துடன் ஒத்துப்போகவில்லை. 

இந்த விஷயத்தை காவல் துறையினரிடம் தெரிவிக்கவே., இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் வீட்டின் அருகே வசித்து வரும் வெங்கட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவரது இரத்த மாதிரியை எடுத்து செய்த சோதனையில் விஜியின் நகத்தில் இருந்த இரத்தத்துடன் ஒத்துள்ளது. இவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., வெங்கடிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமண செலவிற்காக நகை மற்றும் பணங்களை கொள்ளையடிக்க சென்ற சமயத்தில் கொலை செய்ததும்., வெங்கட்டிடம் இருந்து தப்பிப்பதற்கு விஜி கழுத்தில் கை வைத்து அழுத்திய சமயத்தில் வெங்கட்டின் இரத்தம் விஜியின் நகத்தில் பதிவானதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruthani girl and her son killed case culprit was arrested and investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->