கள்ளகாதலியின் வீட்டிலேயே கள்ளகாதலியின் கணவனை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட வாலிபர்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காலேஜ் ரோடு வசந்தம் நகரை சார்ந்தவர் ரஜினி (வயது 40). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் செல்வி (வயது 35). இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்., குழந்தைகள் அனைவரும் திருவண்ணாமலையில் இருக்கும் பாட்டி இல்லத்தில் தங்கி பயின்று வருகின்றனர். 

செல்வி திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்., இவருடன் வீரமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் ஏற்ற பழக்கமானது., நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., ரஜினி பணிக்கு செல்லும் சமயத்தில் வந்து செல்லும் வழக்கத்தை வீரமணி வைத்துள்ளார். 

இந்நிலையில்., நேற்று வழக்கம்போல ரஜினி வேலைக்கு சென்றதை அறிந்து இல்லத்திற்கு சென்ற வீரமணி இல்லத்தில் இருக்கும் சமயத்தில்., திடீரென ரஜினி வந்துள்ளார். இவர்கள் இருவரையும் கவனித்த ரஜினி கண்டிக்கவே., இருவருக்கும் இடையே வாக்குவாதமானது ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறிய பின்னர் கத்தியை எடுத்து வீரமணி ரஜினியை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரஜினி அறவே., அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் மருத்துவமனைக்கு செல்வதற்குள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் சோதனை செய்த பின்னர் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து இந்த தகவலானது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இவர்கள் இருவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டதை உறுதி செய்தனர். தலைமறைவான வீரமணியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur a man killed by illegal affair


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->