10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த 3 தலித் வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை இரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரை அடுத்துள்ள காமாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் சார்ந்தவர் கணேஷன். இவரது மனைவியின் பெயர் காளீஸ்வரி. இவர்கள் இருவருக்கும் நந்தினி என்ற 10 வயதுடைய பெண் குழந்தை இருந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். குழந்தை நந்தினி கடந்த 2014 ம் வருடத்தில் டிசம்பர் 1 ம் தேதியன்று விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு., விளையாட சென்றுள்ளார். விளையாட சென்ற குழந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால்., அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அங்குள்ள பகுதிகளில் தேடி அலைந்தனர். 

சிறுமியை எங்கு தேடியும் காணவில்லை என்பதால்., சிறுமியை கண்டுபிடித்து தர கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில்., டிசம்பர் 2 ம் தேதியன்று சிறுமி நந்தினி சடலமாக அங்குள்ள கிணற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சிறுமியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். இந்த நிலையில்., மருத்துவமனையில் இருந்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில்., சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனை அறிந்த காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தவே., அங்குள்ள காமாட்சிபுரம் அம்பேத்கார் காலனியை சார்ந்த பச்சையப்பனின் மகன் சுந்தராஜ் (வயது 29)., எஸ்தர்ராஜின் மகன் ராபின் என்கிற ரவி (வயது 27)., பழனிச்சாமியின் மகன் குமரேசன் (வயது 23) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் தலித் அமைப்பை சார்ந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அங்குள்ள கிணற்றில் கொலை செய்து வீசியதை ஒப்புக்கொண்டனர். 

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது தேனியில் உள்ள மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வி.திலகம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை., ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் கொலை குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதித்து தனது தீர்ப்பை வழங்கினார்.   

இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து மூவரும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததை அடுத்து., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகளின் முன்னிலையில்., இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தூக்கு தண்டனையை இரத்து செய்து., கொலையான சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்கக்கூறி உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni a 10 year old girl rapped by three men case Madurai court judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->