ஆலைக்கழிவினால் அழியப்போகும் மக்கள்!. அனைகள் அனைத்தும் நுரை!. - Seithipunal
Seithipunal


 


கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சலவை ஆலைக் கழிவுகள் கலப்பால், நொய்யலாற்றில் நுரை பொங்கி  எங்கு பார்த்தாலும் நுரை மூட்டமாக காட்சி அளிக்கிறது.

கடந்த சில நாட்களாக கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அனைகளிலும் நீர் நிரம்பி வழிந்தோடுகிறது.

இந்த நிலையில், குனியமுத்தூர் அருகேயுள்ள அணை மேடு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து விழும் நீரில் நுரை பொங்கி எழுகிறது. அப்பகுதி முழுவதும் நுரை மூட்டமாக காட்சி அளிக்கிறது.

கோவை மாவட்டம் புட்டுவிக்கி பகுதியில் செயல்படும் சலவை ஆலையில் இருந்து வெளியேறும் ஆலை கழிவுகளே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

நீர்வரத்து அதிகரித்து இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, இரு தினங்களாக சலவை ஆலையில் இருந்து ஆற்றில் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும், இதன் காரணமாகவே நுரை அதிகளவில் பொங்கி எழுவதாகவும் புகார் அளிக்கின்றனர் பொதுமக்கள்.

அந்த நுரையானது ஆத்துப்பாலம், கரும்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவுவதால் சரும பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தோலில் நுரை பட்டு அரிப்பு உண்டாகி, புண் ஏற்படுவதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், சலவை ஆலை மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை சரி செய்யவில்லை என்றால் மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிபடும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In the Coimbatore district, the plant waste is mixed with the foam in the river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->