16 வயது மாணவனை பணத்திற்காக கொத்தடிமையாக விற்பனை செய்த நண்பர்கள்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோடியம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் தினேஷ் (16)., இவர் தஞ்சாவூரில் இருக்கும் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பள்ளியில் திருகாவூரை சார்ந்த ராஜா (வயது 17)., வலையப்பேட்டை பகுதியை சார்ந்த சரவணன்., மாத்தூரை சார்ந்த சந்திரன்., கறந்தட்டான் பகுதியை சார்ந்த சுந்தர் என்ற மாணவர்களும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளனர். (மாணவர்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது).

தினேஷ் கடந்த டிசம்பர் 4 ம் தேதியன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய தினேஷின் தாயார் மகனை பல இடங்களில் தேடியும் காணாததால்., பதற்றமடைந்து விஷயம் குறித்து தினேஷின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த தினேஷின் தந்தை உடனடியாக ஊருக்கு வந்து தனது மகனை தேட துவங்கினார். 

மகன் எங்கு தேடியும் கிடைக்காததால் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர்., விஷயம் குறித்து எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளாததால்., தாமாகவே முன்வந்து தனது மகனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார். தனது மகன் பயிலும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்ட போது டிசம்பர் 4 ம் தேதியன்று மேற்கூறியுள்ள மாணவர்ளுடன் பள்ளியை விட்டு சென்றதாக தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து., அவர்களின் இல்லத்திற்கு சென்ற தினேஷின் தந்தை அவர்களிடம் கேட்ட போது., நாங்கள் எங்கும் தினேஷை அழைத்து செல்லவில்லை என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு மனம் திருப்தி இல்லாத தினேஷின் தந்தை மீண்டும் தலைமை ஆசிரியரை சென்று சந்திக்கவே., அந்த மாணவர்கள் அனைவரும் தீய பழக்கம் கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து மீண்டும் மாணவர்களை வீட்டிற்கு சென்று சந்தித்த தினேஷின் தந்தை., சம்பவத்தன்று நீங்கள் தான் தினேசுடன் சென்றதாக அனைத்து மாணவர்களும் தெரிவிக்கின்றனர்., உங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக கூறி எச்சரித்துள்ளார். மீண்டும் தனது இல்லத்திற்கு திரும்பிய தினேஷின் தந்தைக்கு தனது மகனை தேடியலையவே., தினேஷின் தந்தைக்கு தொடர்பு கொண்ட மாணவர்கள் தினேஷை அங்குள்ள கரம்பத்தூர் பகுதியில் பார்த்ததாக தெரிவித்து அலைபேசியை துண்டித்துள்ளனர். 

இதனை அறிந்த தினேஷின் தந்தை உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தேடியலையவே., அங்குள்ள ஆவூர் சாலைக்கு அருகில் இருந்த பாலத்தில் சுயநினைவை இழந்த படி மயங்கி கிடந்துள்ளார்., இதனை கண்டா அவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து., அவரிடம் விசாரித்துள்ளார். அந்த சமயத்தில் சம்பவத்தன்று மாணவர்கள் வலுக்கட்டாயமாக பள்ளியை விட்டு அழைத்து கொண்டு அங்குள்ள கொடிமரத்து மூலை என்ற பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள தேநீர் விடுதியில் தேநீர் வாங்கி தந்துள்ளனர். 

அந்த நேரத்தில் மாணவர்கள் மற்றொரு நபருடன் பேசிக்கொண்டு இருக்க., டீயை அருந்திய நான் மயக்கமடைந்தேன்.. பின்னர் மீண்டும் எழுந்து பார்த்த போது திருப்பூரில் இருக்கும் பகுதியில் சாப்பாடு வழங்கி கொத்தடிமையாக அடித்து துன்புறுத்தி வேலை வாங்கினார்கள்., இதனை அவரிடம் கேட்ட போது அவர்களுக்கு பணம் வழங்கி கொத்தடிமையாக வாங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.  

இதனை அறிந்த தினேஷின் தந்தை மாணவர்களிடம் சென்று விசாரித்த போது., அந்த மாணவர்களுக்கும் ஆட்கடத்தல் நபர்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது., அவர்களுக்கு நபர்களை வழங்கியவுடன் அந்தந்த மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பணம் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும்., இது போன்ற தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம்., காவல் துறையினரிடம் கூறினால் எங்களின் வாழ்க்கையே போய்விடும் என்று கதறியுள்ளனர். 

இதனையடுத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது மகனை அழைத்து கொண்டு சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur a father rescue her son from kidnapping by her friends


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->