அரசு மருத்துவமனையில் விடியவிடிய வலியால் அலறித்துடித்த கர்ப்பிணி.! விடிந்து வருவதற்குள் நேர்ந்த சோகம்.!! அலட்சியத்தால் அரங்கேறிய விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டை சார்ந்தவர் கோபிநாத். இவரது மனைவியின் பெயர் அகஸ்தியா. இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இந்த சூழலில் கர்ப்பிணியாக இருந்த அகஸ்தியாவிற்கு கடந்த 1 ம் தேதியன்று திடீரென பிரசவ வலியானது ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 

இதனையடுத்து அவருக்கு மருத்துவர் மேற்கொண்ட செய்த சிகிச்சைக்கு பின்னர் பிரசவ வலியானது குறைந்தது. இதன் காரணமாக அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில்., கடந்த 3 ம் தேதியன்று இரவில் திடீரென அகஸ்தியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து., இதனை தெரிவிக்க மருத்துவர்களின் அறைக்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டும் இருந்த நிலையில் மருத்துவர்கள் யாரும் இல்லை. 

இரவு முழுவதும் கடுமையான வலியால் துடித்த நிலையில்., காயில் மருத்துவர் பணிக்கு வந்துள்ளார். மருத்துவமனைக்கு வந்தவுடன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தபின் கர்ப்பப்பையை நீக்கியுள்ளார். 

மேலும்., பிறந்த ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது., குழந்தையின் உடலை தொப்புள் கொடியானது சுற்றிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யும் போது அதிகளவு இரத்தம் வெளியேறி இறந்ததாகவும்., தாயின் உயிரை காப்பாற்றுவதற்கு கர்ப்பப்பையை அகற்றியாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவரின் அறைக்கு சென்று முற்றுகையிட்டு., இரவு மருத்துவர் உரிய நேரத்தில் வந்திருந்தால் எந்த விதமான பிரச்சனையும் இருந்திருக்காது., மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக குழந்தை இறந்துவிட்டது. மேலும்., கர்ப்பப்பையை அகற்றிவிட்டார் என்று புகார் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sengalpet a pregnant lady baby died for doctors irresponsibly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->