குடிமகனுக்கான உரிமையே பறிக்கப்பட வாய்ப்பு?.! ஆக்கிரமிப்பால் ஆதாரமில்லாமல் போகப்போகும் மோசடி போர்வளிகள் - தரமான சம்பவத்தை அரங்கேற்றுமா தமிழக அரசு?.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையத்தில் இருக்கும் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி வேட்டை பெருமாள் கோவில். இந்த பகுதியை சுற்றி இ.எஸ்.ஐ காலனி., வேட்டை பெருமாள் கோவில் பின்புறம் உள்ள பகுதிகளில் சுமார் 1000 ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்த பகுதியில் இருக்கும் ஸ்ரீ வேட்டை வெங்கடேச பெருமாள் கோவில் பின்புறம்., கண்மாய் ஒன்று உள்ளது. இந்த கண்மாய் கரைகளை ஒட்டி இ.எஸ்.ஐ காலனி.,  நெசவாளர் காலனி மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகள் அமைந்துள்ளது. 

கடந்த 1996 ம் வருடத்தின் போது இந்த கண்மாய்க்கு உட்பட்ட பகுதிகளை விற்பனை நிலங்களாக மாற்றுவதற்கு அன்றைய அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி இடத்திற்க்கான பட்டாக்களை பெற்றுள்ளனர். 

இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அரசின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கண்மாய்களை அளந்து அதன் கரைகளை பலப்படுத்தி., ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 

இந்நிலையில்., தற்போது அங்குள்ள கரைகளை சேதப்படுத்திய நபர்., கண்மாய்களின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் இடத்திற்க்கான பட்டா மற்றும் ஆதாரங்கள் அவர் வசம் இருப்பதாக கூறி., கண்மாய்களின் கரைகளை உடைத்து நிலத்துக்கான கற்களை நிலைநிறுத்தியுள்ளார். 

இதனை கண்ட மக்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி பொதுநல மனு தாக்கல் செய்யவுள்ளனர். மேலும்., இது போன்ற தொடர் நடவடிக்கைகள் சில நேரங்களில் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.    

இது குறித்து அங்குள்ள மக்கள் தெவித்ததாவது., அங்குள்ள இடங்கள் அனைத்தும் சர்வே எண் 102 என்பதும்., வேட்டைபெருமாள் கோவில் நிலம் என்பதாலும்., இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவும் வாங்கவும் கூடாது என்ற பிரச்சனைகடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில்., தற்போது கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். 

மேலும்., நீர்நிலைகள் குறித்த ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு வரைப்படத்தை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி இதன் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் நடந்துள்ள இச்சம்பவத்தின் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajapalayam water lake is Aggressive by person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->