முகநூல் காதல் திருமணம்.! மதுவை கட்டாயப்படுத்தி அருந்த வைத்து பலவந்தப்படுத்தல்., இன்னும் பல கொடுமைகள்.!! வெளியான பேரதிர்ச்சி சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்., இணையத்தளத்தில் காதல் என்ற வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்று பல விதமான செய்திகள் தொடர்ந்து வந்தாலும்., அந்த செய்தியை கண்டுகொள்ளாமல் இவங்களுக்கு வேற வேலை இல்லை என்று மனதில் நினைத்து கொண்டு பலர் அந்த செய்திகளை கடந்து செல்கின்றனர். 

in pollachi sexual harassment issue is convert investigation CBCID to CBI

சிலர் அந்த செய்திகளை படித்து நாட்டு நடப்பை நன்றாக அறிந்திருந்தாலும்., சில எதிர்பாராத நேரத்தில் நன்கு படித்து உள்ள நபர்களும் இணைய காதலை நம்பி தங்களின் அற்புத வாழ்க்கையை இழந்து., தினமும் அதனை எண்ணி எண்ணி வருந்தி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில்., தற்போது பொள்ளாச்சியில் அரங்கேறிய சம்பவமானது தமிழகத்தையே உலுக்கியது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு முகநூலின் மூலமாக மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி பகுதியை சார்ந்த அஜித்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது இவர்களுக்கு இடையே நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் தங்களின் காதலை இல்லத்திற்கு தெரியப்படுத்தவே., இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்., தனது காதலரின் ஊரான கொட்டம்பட்டிக்கு வந்து அஜித்குமாரின் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழ்நிலையில்., திருமணம் முடிந்த சில நாட்களில் வரதட்சணை கொடுமையையே அரங்கேற்ற துவங்கியுள்ளனர். 

மேலும்., இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் வர சொல்லி பல முறை உல்லாசம் அனுபவித்து., அதனை ஆபாச படம் எடுத்து திருமணம் செய்யவில்லை என்றால்., புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை இணையத்தில் பரப்பிவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து திருமணம் நடைபெற்றுள்ளது. 

தொடர் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் கட்டாய மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாக்கி., மது போதையில் என்ன செய்கிறோம்? நம்மை என்ன செய்கிறார்கள் என்று கூற தெரியாத அளவிற்கு பல கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில்., வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில்., அவரிடம் இருந்த நகைகளை பறித்து கொண்டனர். மேலும்., அரசியல் கட்சியில் தொடர்புடைய நண்பர்களை அழைத்து இல்லத்திற்கு வந்து மிரட்டுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தக்க விசாரணை மேற்கொள்ள கூறி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai girl complaint collector office her husband activities


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->