களைகட்டிய சித்திரை திருவிழா.! மதுரை மாசி வீதியில் மக்கள் வெள்ளத்துடன் மிதக்கும் தேர்.!!  - Seithipunal
Seithipunal


மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்தத் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். 

இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. 

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

மதுரை கள்ளழகர் வரும் 19 ம் தேதியன்று அதாவது நாளை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வானது நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்., நாளைய திருவிழாவிற்கு இன்றே மக்கள் வெள்ளம் ஆட்பறித்த நிலையில் விழாக்கோலத்தை கொண்டுள்ளது. இன்று மதுரை மாநகரில் உள்ள மாசி வீதியில் தேரோட்டம் நடைபெறுவதை அடுத்து., திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai chithirai festival and god vehicle rounding masi street in Madurai city


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->