குளுகுளு கொடைக்கானலில் நேர்ந்த சம்பவத்தால் கடுமையான பாதிப்பிக்கு உள்ளான மக்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாவே கடுமையான வெயிலானது வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில்., தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்.,. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமானது.

சில மாவட்டங்களில் திடீரென மழையானது பெய்து மக்களின் மனதை குளிர வைத்தது. தமிழகத்தில்., கோயம்புத்தூர்., சேலம்., பொள்ளாச்சி., திருப்பூர் மற்றும் பாளையங்கோட்டையில் பரவலான மழை பெய்து., வெப்பத்தை ஓரளவு தணிந்தது. டெல்டா மாவட்டங்களில் உள்ள திருவாரூர்., நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.  

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும்., கோடை காலத்தில் குழந்தைகளுக்கு பொது விடுமுறையை இன்பமாக கழிப்பதற்கு மலை சார்ந்த சுற்றுலா தலைகளுக்கு மக்கள் அதிகளவில் செல்வது வழக்கம். அந்த வகையில்., தற்போது தேர்தல் மற்றும் சனிக்கிழமை., ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுத்தவதற்கு பணிக்கு செல்லும் நபர்களும் விடுமுறையில் சென்றுள்ளனர். 

இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு அதிகளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள சுற்றுலா தளங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த சமயத்தில் அங்குள்ள தூண்பாறை செல்லும் பகுதியில் சாலை நடுவே மரம் தீடிரென விழுந்ததை அடுத்து சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kodaikanal have massive traffic when road block by tree


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->